
தரங்கம்பாடி Tranquebar history
தரங்கம்பாடி Tranquebar history
தரங்கம்பாடி (ஆங்கிலம்:Tranquebar), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மயிலாடுதுறை மாவட்டத்தின் 8 பேரூராட்சிகளில் ஒன்றாகும். தரங்கம்பாடி வட்டத்தின் தலைமையிடமும், பேரூராட்சியுமான தரங்கம்பாடியின் கடற்கரையில் தரங்கம்பாடி மாசிலாமணிநாதர் கோயில் உள்ளது.
தரங்கம்பாடியில்தான் இந்தியாவின் முதல் அச்சு இயந்திரத்தின் மூலம் பைபிள் அச்சிடப்பட்டது. டேனீஷ் காரர்களின் கோட்டை இன்றும் உள்ளது.
காவேரி ஆறு, வங்காள விரிகுடாவில் கலக்கும் கழிமுகத்தில், காரைக்காலுக்கு வடக்கே 15
கிமீ தொலைவில் தரங்கம்பாடி பேரூராட்சி உள்ளது.
நாகப்பட்டினத்திலிருந்து 34 கிமீ தொலைவில் அமைந்த தரங்கம்பாடிக்கு அருகில் மயிலாடுதுறை 31 கிமீ; சீர்காழி 31 கிமீ தொலைவில் உள்ளது. தரங்கம்பாடிக்கு அருகமைந்த தொடருந்து நிலையம் 13 கிமீ தொலைவில் உள்ள காரைக்காலில் உள்ளது.
சிதம்பரம் - நாகப்பட்டினம்,
பொறையார் - மயிலாடுதுறை,
மயிலாடுதுறை - நாகப்பட்டினம்,
காரைக்கால் - பொறையார் செல்லும் பேருந்துகள் தரங்கம்பாடி வழியாகச் செல்கின்றன.
டேனிஷ் கோட்டை என அழைக்கப்படும் டேனியக் கோட்டை (Fort
Dansborg உள்ளூரில் Danish
Fort) என்பது தமிழகத்தின், தரங்கப்பாடியில், வங்கக் கடலை ஒட்டியுள்ள ஒரு டென்மார்க்காரர்களின் கோட்டையாகும். இக்கோட்டை தஞ்சை அரசரான இரகுநாத நாயக்கருடன் டேனிஷ் அதிகாரியான ஓவ் கிட் என்பவரால் ஒப்பந்தம் செய்ய்யப்பட்டு கி.பி 1620
இல் கட்டப்பட்டது. இந்தக் கோட்டையே டேனிஷ்காரர்களின் கோட்டைளில் இரண்டாவது பெரிய கோட்டையாகும். இக்கோட்டை தரங்கம்பாடியோடு 1845
ஆண்டில் பிரித்தானியருக்கு விற்கப்பட்டது,
அதன் பிறகு இந்த ஊரும் இக்கோட்டையும் தன் சிறப்பை இழந்தன. இந்தியா விடுதலையான 1947
க்கு பின்னர் இக்கோட்டை தமிழக அரசால் ஆய்வு மாளிகையாக 1978வரை பயன்படுத்தப்பட்டுவந்தது. அதன்பிறகு தமிழக தொல்லியல் துறையின் கட்டு்ப்பாட்டில் இருந்து வருகிறது. தற்போது அகழ் வைப்பகம் என்னும் அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது. இந்த அருங்காட்சியகத்தில் இந்த டேனிஷ் கோட்டை சார்ந்த பொருட்களும்,
டேனிஷ் காசுகள்,
டேனிஷ் தமிழ் பத்திரங்கள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. கோட்டை அண்மைக் காலத்தில்,
இருமுறை புதுப்பிக்கப்பட்டுள்ளது. 2001
இல் டேனிஷ் மன்னர் குடும்பத்தின் உதவியுடன் மாநில தொல்லியல்துறை பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டது. அடுத்து 2011
தமிழக சுற்றுலா துறை மூலம் புதுப்பிக்கப்பட்டது. இந்தப் பகுதியில் இக்கோட்டை முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக இருக்கிறது.
சோழமண்டலக் கடற்கரை என்பது பன்னாட்டு வணிகப் பகுதியாக கி.மு 3ஆவது நூற்றாண்டிலிருந்து விளங்கியது. ஐரோப்பிய காலனிய அரசுகளான பிரித்தானியர் , பிரஞ்சியர் , டச்சு, போர்த்துகீசியர் போன்றோரால் கி.பி 17
ஆம் நூற்றாண்டின் முற்பகுதியின் போது இந்தியாவுடன் வணிகம் செய்ய கடல்சார் வர்த்தக நிறுவனங்கள் நிறுவப்பட்டன. டேனிஷ் கிழக்கு இந்தியக் கம்பெனி டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் 1616
இல் நிறுவப்பட்டு,
அட்மிரல் ஓவ்கிட் (கி,பி.1594-1660
) என்பவர் அனுப்பப்பட்டார்.[1][2] ஓவ்கிட் தஞ்சாவூர் ஆட்சியாளரான இரகுநாத நாயக்கருடன் (1600-34)
1620 ஆம் ஆண்டில் போர்த்துகீசியரின் எதிர்ப்பு இருந்தபோதிலும் ஒப்பந்தம் மேற்கொண்டார். அதன்படி மொத்தம் 8
கி.மீ (5.0
மைல்) க்கு 4
கி.மீ (2.5
மைல்) பரப்பளவு இடத்தை ஆண்டு வாடகை ரூ 3111
என்ற ஒப்புதலுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி தரங்கம்பாடியின் அண்டைக் கிராமங்களில் இருந்து வரி வசூலிப்பதில் டேனிஸ் அனுமதி பெற்றது. இந்த ஒப்பந்தம் ஒரு தங்க இலையில் போடப்பட்டது. இந்தக் கையெழுத்துப் பிரதி கோபன்ஹேகனில் உள்ள டேனிஷ் அரச காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
டேனிஷ் கோட்டைகளில் இரண்டாவது பெரிய கோட்டை இதுவே ஆகும். முதல் கோட்டை யாது என்றால் அது ஷேக்ஸ்பியருக்கு ஹேம்லட் எழுத உத்வேகம் அளித்த க்ரோன்போர்க் கோட்டையாகும். இக்கோட்டை உள்ளூர் தொழிலாளர்கள் உதவியுடன் டேனிஷ் பாணியில் ஓவ்கிட்டால் கட்டப்பட்டது. கோட்டையை ஒட்டிய தரைத்தளம் கிடங்காகவும்,
படையினரின் ஒய்வறையாகவும் பயன்படுத்தப்பட்டது. அடுத்த தளம் ஆளுநர் மற்றும் மத குருக்கள் போன்றோர் வசிக்குமிடமாக இருந்தது. டேனிஷ் கோட்டை 17
ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் டேனிஷ்காரா்களின் மையமாக இருந்தது. முதலில் இப்பகுதி ஒரு மீன்பிடி கிராமமாக இருந்தது. கோட்டை கட்டியபிறகு இங்கிருந்து பருத்தி, ஜவுளி போன்றவற்றை ஏற்றுமதி செய்யும் முதன்மை வாணிகத் துறைமுகமாக ஆனது. 18ஆம் நூற்றாண்டின் மத்தியில் இந்நகரத்தின் வர்த்தகரீதியான முக்கியத்துவம் குறைந்து, வங்காளத்தின் சிறீராம்பூர் ஜவுளி உற்பத்தி மையமாக ஆனது. என்றாலும் தரங்கம்பாடியிலேயே காலனியின் தலைமையகம் இருந்துவந்தது. 1845இல் இந்த நகரமும்,
கோட்டையும் பிரித்தானியருக்கு விற்கப்பட்டது. இதன்பிறகு தரங்கம்பாடியும் அதன் கோட்டையும் தன் வணிக முக்கியத்துவத்தை இழந்தன.